என் பெயர் ஆர்த்தி. மருத்துவ பொது நுழைவுத்தேர்வானது, 2012, மே 13ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பாடத்திட்டத்தை எம்சிஐ வழங்கியுள்ளது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் மெட்ரிக் பிரிவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால், எம்சிஐ தயாரித்துள்ள பாடத்திட்டம், நமது பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. தமிழகத்தில், 2012ம் ஆண்டு இந்த பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுமா? அப்படி நடந்தால், அதற்கு எவ்வாறு தயாராவது? | Kalvimalar - News

என் பெயர் ஆர்த்தி. மருத்துவ பொது நுழைவுத்தேர்வானது, 2012, மே 13ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பாடத்திட்டத்தை எம்சிஐ வழங்கியுள்ளது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் மெட்ரிக் பிரிவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால், எம்சிஐ தயாரித்துள்ள பாடத்திட்டம், நமது பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. தமிழகத்தில், 2012ம் ஆண்டு இந்த பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுமா? அப்படி நடந்தால், அதற்கு எவ்வாறு தயாராவது?ஜனவரி 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

திட்டமிடப்பட்டுள்ள பொது நுழைவுத்தேர்வு என்இஇடி-யுஜி, 2013ம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. வரும் 2012ம் ஆண்டில், எம்பிபிஎஸ் படிப்பிற்கு, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, அதில் கவனம் செலுத்துங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us